Close
நவம்பர் 21, 2024 11:42 மணி

பாரதியைப்போல் தன் மனைவிக்கு உண்மையாக இருந்தவர்கள் வேறு யாருமில்லை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து, ஸ்ரீபாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் "தலைமைத்துவம் அறிவோம்" என்ற கருத்தரங்கை நடத்தியது.

பாரதியைப்போல் தன் மனைவிக்கு உண்மையாக இருந்தவர்கள் வேறு யாருமில்லை என்றார் ஞானாலயா  பா. கிருஷ்ணமூர்த்தி.

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து, ஸ்ரீபாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் “தலைமைத்துவம் அறிவோம்” என்ற கருத்தரங்கை வெள்ளிக்கிழமை  நடத்தியது.

கருத்தரங்கத்திற்கு ஸ்ரீபாரதி மகளிர் கல்லூரி தலைவர் கு.தனசேகரன் தலைமை வகித்தார்.இணைப்பாடத்திட்டம் தொடர்பாக தில்லி கல்விக் கருத்தரங்கம் மற்றும் சண்டிகார் பல்கலைக்கழகத்திலும் விருது பெற்ற கவிஞர் தங்கம்மூர்த்திக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

புதுக்கோட்டை
கருத்தரங்கில் பேசிய ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி

ஏழைக்கு எழுத்தறிவித் தல் மிகச்சிறந்த செயல் என்றான் பாரதி.”சாதிப் பெயர்களை ஒழிக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு பெயரோடும் பாரதி யின் பெயரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார் கண்ணதாசன்.பாரதியைப்போல் தன் மனைவிக்கு உண்மை யாக இருந்தவர்கள் வேறு யாருமில்லை.

இங்கர்ஸால் போன்ற சிறந்த நாத்திகர்கள் யாருமில்லை. அதேபோல கொள்கைப்பிடிப்புடைய மனிதனும் யாருமில்லை. அமெரிக்க குடியரசு தலைவர் தேர்தலில். நாத்திகக் கொள்கை யை விட்டுவிடு உனக்கு வாக்களிக்கிறோம் என்றபோது, அதற்கு உடன்படாமல் தோல்வியைத் தழுவியவர் அவர். உலகத்தை வெல்லுவேன் என்று சொன்ன நெப்போலிய னைவிட, மகிழ்ச்சியோடு, குடும்பத்தோடு இருக்கும் சாராரண மனிதன் உயர்ந்தவன் என்றார் இங்கர்ஸால்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியம் வேண்டுமா, சேக்ஸ்பியர் வேண்டுமா என்றபோது மெக்காலே ஷேக்ஸ்பியர் என்றான். அதைவிடப் பெருமைப்படத்தக்க அளவில் ஒளவையார் “சங்க இலக்கியங்கள் தா” என்றார். மேலும் தங்கம்மூர்த்தியின் வெற்றிக்கு, அவர் செய்திருக்கும் கல்விப்பணி, புன்னகை நிறைந்த முகம், அனைவரிடமும் காட்டும் அன்பு , குடும்பத் தில் காட்டும் அக்கறை மற்றும் அவரின் ஈகைக்குணமே என்றார் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி.

பின்னர், தலைமைத்துவம் என்ற தலைப்பில் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசியதாவது:

புதுக்கோட்டை
கருத்தரங்கில் பேசுகிறார், கவிஞர் தங்கம்மூர்த்தி

அறந்தாங்கி அருகில் சுப்பிரமணியபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்த நான் வெற்றிகரமாக 25 ஆண்டுகளைக் கடந்து வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியை நடத்தி வருவதற்கு என்னிடம் உள்ள பின்வரும் அல்லது ஒவ்வொருவருக்கும் தேவையான பின் வரும் பண்புகளைக் குறிப்பிடலாம்.

வெற்றியாளர்கள் ஆக முதலில் அவமானங்களை தாங்கிக் கொள்கிற பக்குவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். வெற்றியாளர்கள் பலரும் அவமானங்களைப்புறந்தள்ளி கொண்டு லட்சியத்தில் நின்று வெற்றிபெற்றவர்கள்தாம். ஆங்கிலத்தில் எனக்கு மிகப்பெரிய பரிச்சயம் இல்லை என்றாலும் அதை முழுமையாக கற்றுக் கொள்வதற்கான முயற்சியில் தளரவில்லை.

ஆங்கிலத்தை முழுமையாக அறிய ஓராண்டு முழுவதும் ஆங்கிலப் பத்திரிக்கைகளை மட்டுமே வாசித்தேன். தளராத முயற்சியில் வெற்றி பெற்றேன்.எதையும் அழகாக, நேர்த்தி யாக செய்ய வேண்டும் என்பதில் அக்கறை வேண்டும். அது என்னிடம் எப்போதும் உண்டு.

சொர்க்கம் என்பது பூரணத்துவமான செயல்பாட்டில் உள்ளது என்பார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் அழகாக, நேர்த்தியாக செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.தொடர்ந்து கற்கும் பழக்கம் வேண்டும். முயற்சியையும், பயிற்சியையும் எப்போதும் விட்டுவிடக்கூடாது.

மற்றவர்களின் விமர்சனங்களைப் புறந்தள்ளி, நாம் செய்யும் செயலை மட்டுமே தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்.குடும்பம் மிகவும் முக்கியம். அதை மகிழ்ச்சி யானதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கற்ற கல்வி ஒருபோதும் கைவிடாது. மேலும் வெற்றிக்கு அவசியத் தேவை தொடர் புத்தக வாசிப்பு.மேற்கண்ட பண்புகளை மாணவிகள்  வளர்த்துக் கொண்டு வெற்றி யாளராகுங்கள் என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி

நிகழ்ச்சியில் வாசகர் பேரவை ஆலோசகர்கள் சத்தியராம் ராமுக்கண்ணு, அ.லெ.சொக்கலிங்கம், சுதந்திரராஜன், பேராசிரியர் மு.பாலசுப்பிரமணியன், கவிஞர் பீர்முகமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் கவிதா வரவேற்புரையாற் றினார். வாசகர் பேரவைச் செயலர்  சா. விஸ்வநாதன் அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக பேராசிரியர் உஷா நந்தினி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top