Close
நவம்பர் 22, 2024 8:00 காலை

உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட்டு,விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைக்ககோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

பூதலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர்

உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட்டு, விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைத்திட வேண்டுமென வலியுறுத்தி  தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,

நூறுநாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதிப் பாக்கியை ஒன்றிய அரசுஉடனே வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்கள், சிறு,குறு விவசாயிகளுக்கு பயனளிக்காத, நடைமுறையில் உதவாத உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட்டு,இயற்கை மரணம் எனில், 50 ஆயிரம் ரூபாய், விபத்தில் இறந்து விட்டால் 5 இலட்சம் ரூபாய், 60 வயது நிறைவடைந்தால் மாதம் 1200 ரூபாய் ஓய்வூதியம்,கல்வி-பிரசவம்-திருமண காலங்களில் நிதி உதவி போன்ற சமூக பாதுகாப்பு உதவிகள் அளிக்க வேண்டும்.

விவசாய வேலை செய்வோர் மற்றும் வேலையளிப்போர் வழியாக வாரிய உறுப்பினர் கட்டணம் பெறப்பட்டு, தொழிற்சங்க உரிமையோடு நலத்திட்டங்கள் உதவிகள் பெறுவதை உறுதி செய்ய 1996-2001 காலத்தில் கலைஞர் அமைத்த விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும்.

பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஜி.தங்கமணி தலைமையில்பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் இரா.இராமச்சந்திரன், சி.பி.ஐ ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.முகில்,சங்க நிர்வாகிகள் எம்.அய்யாராசு
,ஜெ.முத்தமிழ்செல்வன்,வீ.சுப்பிரமணியன், என்.முத்துலெட்சுமி, வீ.ராமமூர்த்தி,ஆர்.பாரதி, பி.பாலகிருஷ்ணன், என்.சீதையம்மாள் உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top