Close
நவம்பர் 22, 2024 6:23 மணி

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேருக்கு நிவாரண நிதி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு

முதலமைச்சர் ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், வச்சக்காரபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (24-01-2024) காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், முதலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன்  வீரக்குமார் (55), மற்றும் விருதுநகர் வட்டம், கன்னிசேரிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜ்  மகன் காளிராஜ் (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன்னிசேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் மகன் சரவணக்குமார் (24) மற்றும் இனாம் ரெட்டியபட்டி கிராமத் தைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் சுந்தரமூர்த்தி (17)  ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி யுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா  ரூ 3 லட்சமும், பலத்த காயமடைந் தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top