Close
நவம்பர் 22, 2024 7:03 காலை

திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் கண் அறுவை சிகிச்சை அரங்கம்

சென்னை

திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 75 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண் அறுவை சிகிச்சை அரங்கத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம் திருவொற்றியூர் கே.பி.சங்கர் மண்டல குழு தலைவர், தி.மு.தனியரசு உள்ளிட்டோர்

திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் ரூ 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண் அறுவை சிகிச்சை அரங்கத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இங்கு தினமும் 500 -க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் இது தவிர 50 படுக்கையில் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

அரசு பொது மருத்துவமனையை திருவொற்றியூர் முதல் பொன்னேரி வரை உள்ள பொதுமக்கள் பயன் படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இந்த அரசு பொது மருத்துவ மனையில் எம்.ஆர்.எஃப் தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பாண்மை நிதியின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில்  கண் அறுவை சிகிச்சை மையம் கட்டப்பட்டது.  எச்.பி.சி.எல் தனியார் நிறுவனம் ரூ.20 லட்சம் செலவிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியது.

இதனையடுத்து ரூ. 75 லட்சம் செலவிலான  கண் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைத்து பார்வை யிட்டார். அப்போது அங்கு வந்திருந்த நோயாளிக ளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவொற்றியூர் பகுதியில் நடுத்தர ஏழை தொழிலாளர் வர்க்கத்தை சார்ந்த மக்கள் பெரும்பான்மை யாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கண் அறுவை சிகிச்சை மையம் உருவாக்க வேண்டும் என சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்ததையடுத்து, தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பாண்மை திட்ட நிதியிலிருந்து ரூ. 75 லட்சம் செலவில் புதிய கண் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்கப் பட்டுள்ளது.  மேலும் கண் மருத்துவர் மற்றும் மருத்துவ பணி யாளர்கள் இம்மையத்திற்காக கூடுதலாக நியமிக்கப் பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லை.

மக்கள் அதிக அளவில்இந்த மருத்துவமனையை பயன்படுத்து வதால் கூடுதலாக மருத்துவர்கள் பணியமர்த்தபட உள்ளனர். தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் ஏதும் பரவலாக தற்போது இல்லை.டெங்கு மாதிரியான காய்ச்சல் கட்டுக்குள் இருக்கி றது.

டெங்குவால் உயிரிழப்பு என்பது வெகுவாக குறைக்கப்பட்டுள் ளது. சிலர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகும் போது மருத்து வர்களின் ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெறுகின்றனர் . இதுபோன்ற நிகழ்வுகளில் தான் உயிரிழப்பு இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு ஆரம்பசுகாதார நிலையம்,மருத்துவமனை, மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளன.

எண்ணூர் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் மீனவர்களுக்கு முழுஉடல் பரிசோதனை வரும் ஞாயிற்று கிழமை மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நடைபெறும் என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.

.நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். சுதர்சனம் திருவொற்றியூர் கே.பி. சங்கர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு,பகுதி செயலாளர் வை. ம. அருள்தாசன், மாமன்ற உறுப்பினர் சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top