புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத் தினை,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் (30.01.2024) திறந்து வைத்தார்.
பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் கள். அந்தவகையில் தமிழகம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமி ருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் ஆயிங்குடி ஊராட்சி யில், புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயி கள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் இணைய தளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் இடைதரகர்களின்றி தங்கள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் காலதாமதமின்றியும், சேதமின்றியும் விற்பனை செய்வதற்கு உறுதுணையாக உள்ளது.
அதனடிப்படையில் ஆயிங்குடி தெற்கு, ஆயிங்குடி மேற்கு, ஆயிங்குடி வடக்கு, நெய்வத்தளி ஊராட்சி, அரசர்குளம் வடபாதி ஆகிய கிராமங்களை சேர்ந்த 1,000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் அனைவரும் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் எம்.சீதாராமன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரிதா மேகராஜ், ஆத்மா கமிட்டி தலைவர் எல்.குமார், துணை மேலாளர் (தரக் கட்டுபாடு) முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.