Close
நவம்பர் 22, 2024 12:20 காலை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில்  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நன்றி அறிவிப்பு மாநாடு ஆயத்த கூட்டம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நன்றி அறிவிப்பு மாநாடு ஆயத்த கூட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெறக்கூடிய நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக அவசர ஆயத்த கூட்டம் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மாநாட்டு ஆயத்த பணிகள் குறித்தும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 243 குறித்தும் சங்கத்தின் வரலாறு குறித்தும் பேசினார்.

சென்னையில் நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் தொடக்க கல்வித்துறையில் மாநில அளவிலான மூதூரிமை கடைபிடிக்கப்படும் என அறிவித்து அரசாணை எண் 243 வெளியிடப்படடுள்ள தமிழ்நாடு முதல்வருக்கும்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 4 -ல் நடைபெறுகிறது.

நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல் நிகழ்வாக கல்வியில் கலைஞர் என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவும், கவிதை நூல் வெளியீட்டு பரிசு அளிப்பு நிகழ்வும் நடைபெறுகிறது.

கந்தர்வகோட்டை ஒன்றிய சார்பில் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்களும் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ள கோரிக்கைகளானபுதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத் தை அமல்படுத்த வேண்டும் எனவும், 2004 முதல் 2006 தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக மாற்றுதல்,பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போல தொடக்கக் கல்வித் துறையில் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் உருவாக்கு தல், ஈட்டிய விடுப்பு பணம் ஒப்படைப்பை மீண்டும் வழங்கு தல், தொடக்க மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை இல்லை என அரசின் கொள்கை முடிவை  நடைமுறைப்படுத்தக்  கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில் மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துக்குமார், செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கலைமணி, மாவட்ட துணைத் தலைவர் ரவீந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் நாராயணசாமி, ரீனா மேரி, ஜெகநாதன், விமல் விஸ்வநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆயத்த குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் 2024 ஆம் ஆண்டிற்கான காலண்டர் வழங்கப்பட்டு ஆண்டு சந்தாவும் புதுப்பிக்கப்பட்டது. முன்னதாக வட்டாரச் செயலாளர் ரவி  வரவேற்றார். நிறைவாக பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top