Close
மே 18, 2024 6:33 காலை

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்… புதுக்கோட்டை  மண்டலத்தில் 426 பேர் கைது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை  மண்டலத்தில் 426 போக்குவரத்துத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்

அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மண்டலத்தை மறியலில் ஈடுபட்ட 426 தொழிலாளர்கள் கைது செய்யப்பட் டனர்.

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி  ஜன.9 முதல் ஏடிபி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றன.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் இரண்டாவது நாளான புதன்கிழமையும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள்இயக்கப் படவில்லை. இதனால், பல்வேறு இடங்களில் போக்கு வரத்து ஸ்தம்பித்தது. அனுபவமில்லாத தொழிலாளர் களைக் கொண்டு இயக்குவதால் ஆங்காங்கே மரணபயத்துடனேயே பயணிகள் செல்ல வேண்டி உள்ளது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக நடைபெற்ற வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மண்டலப் பொருளாளர் கே.மாசிலாமணி, சிஐடியு நகரக்கிளை செயலாளர் எஸ்.அழகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்போராட்டத்தில் புதுக்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கிளைகளில் இருந்து 426 தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டனர்.

அண்ணா தொழிற்சங்க மண்டலப் பொதுச் செயலாளர் எஸ்.செபஸ்தியான், சிஐடியு பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.கணேசன், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் இளங்கோவன், லோகநாதன், திருநாவுக்கரசு, சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர் மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top