புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி முருகன் கோவிலின் குடமுழக்கு இன்று விமர்சனம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மேல ராஜா வீதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது.
பழமை வாய்ந்த இந்த முருகன் கோயில் புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.
12 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த கோயிலுக்கு குடமுழக்கு விழா நடத்த திட்டமிட்டு அதற்கான திருப்பணி வேலைகளை கடந்த சில ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தினரும் அறநிலைய துறையினரும் செய்து வந்தனர்.
திருப்பணி வேலைகள் நிறைவடைந்து தண்டாயுதபாணி முருகன் கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையோடு வானத்தில் கருட பகவான் வட்டமிட மக்களின் அரோகரா கோஷங்களுடன் சிவாச்சாரியார்கள் கோயில் கலசத்தில் புனித நீரை ஊற்றினர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.