Close
நவம்பர் 22, 2024 5:28 காலை

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் : சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் கருத்து

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம்

தமிழக அரசின் இன்றைய பொது நிதிநிலை அறிக்கையில்  வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், நாட்டில் நிகழும் தண்ணீர் தேவையை போக்கும் காவிரி – வைகை – குண்டாறு திட்டத்திற்கு தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது மிகவும் ஏமாற்றமளிப்பதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ஜி.எஸ். தனபதி வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு
ஜி.எஸ். தனபதி

பருவகால மாற்றங்களை மக்கள் எதிர்கொள்ள எந்த முன்னெடுப்பும்  இல்லை. 6000 பாசனக் குளங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. சுகாதாரம் மருத்துவத் துறையில் சித்த மருத்துவம் மற்றும் இயன்முறை மருத்துவத் துவத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.

மணல் போன்ற கட்டுமான பொருட்களின் தட்டுப்பாடு காரணமாய் அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகளின் கட்டுமான வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தி இருக்கலாம்.

கல்விக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது. காலை உணவு விரிவாக்கம் பாரட்டத்தகுந்தது. தொழில் பயிற்சி பள்ளிகள் கூடுதலாக கொடுத்துள்ளது மகிழ்ச்சி.

இந்த ஆண்டு மாநிலத்தின் மத்தியப்பகுதியில் பருவ மழை குறைவால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பொதுவாக மழைநீர் சேகரிப்பதற்கான திட்டங்கள் இல்லை இவைகளை கருத்தில் கொண்டு வரும் நாட்களில் நிதி ஒதுக்கிடு செய்து கொடுக்க வேண்டும்.

மரபு வழி கட்டுமானம் என்பவை முன்னெடுக்க வேண்டும், சூழியல் சீர்கேட்டையும், ஆறுகளில் தண்ணீர் மாசடைதல் தடுக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தலைவர் ஜி.எஸ். தனபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top