அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள் ளதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், புதிய திட்டங்கள் அறிவித்துள்ளதற்குதமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்து றைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கும்,
அரசு பள்ளிகளில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம்,மாணவர்களின் கல்வித் தகுதியை மேம்படுத்த 435 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும் என அறிவிப்பிற்கும்,நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை, அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள் ரூ. 200 கோடியில் உருவாக்கப்படும்,
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு ரூ. 100 கோடி, ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் திறன்மிகு வகுப்பறைகள், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள், ஆயிரம் நபர்களுக்கு பணியாளர் தேர்வாணையம் ரயில்வே வங்கி தேர்வுகளுக் கான பயிற்சி ஆறு மாத உறைவிடப் பயிற்சிக்கு 6 கோடி ஒதுக்கீடு,
மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி படிப்புக்கான முழு செலவையும் அரசை ஏற்கும், புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிக ளுக்கும் விரிவாக்கம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், ஊரகப்பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1-5 மாணவர்களுக்கு விரிவாக்கும் திட்டம்,
உயர்கல்வி பயிலும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2500 கோடி கல்விக்கடன், பொது நூலகங்கள் புதிய கட்டடங்கள் உருவாக்கம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி, உள்ளிட்ட 2024- 25-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், புதிய திட்டங்களை அறிவித்துள்ளதற்கும்,
தமிழ்நாடு முதல்வர் மு .க. ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.