Close
நவம்பர் 22, 2024 6:46 காலை

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசி பெருந்திரு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை பூச்சொரிதலுடன் தொடக்கம்

புதுக்கோட்டை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில்

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசி பெருந்திரு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) பூச்சொரிதலுடன் தொடங்குகிறது.

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்துடன் விமரிசையாக நடைபெறும்.

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசி பெருந்திரு விழாவை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) பூச்சொரிதல் விழாவும் 11.03.2024 -ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

புதுக்கோட்டை
திருவப்பூர் மாரியம்மன்

விழாவையொட்டி பூச்சொரிதல் விழாவுடன் கூடிய தேரோட்டம் காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் விழா 25.02.2024 அன்று நடக்கிறது. இதையொட்டி அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது

புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.

இதேபோல பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தம்பதிகள் கரும்புத் தொட்டில் கட்டி கோயிலுக்கு மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டுபுதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர், மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்குவார்கள்.

இதைத்தொடர்ந்து இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் சந்நதியில் பூக்களை சார்த்தி வழிபட்டுச் செல்வார்கள் தொடர்ந்து (27.02.2023) திங்கள்கிழமை அதிகாலையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

11.03.2024 -ஆம் தேதி அம்மன் தேரோட்டம்: இதைத்தொடர்ந்து வருகிற 03.03.2024 அன்று இரவு காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் 15 நாள் திருவிழா தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்துமாரியம்மன் வீதிஉலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8 -ஆம் நாள் (10.03.2024) அன்று பொங்கல் விழா.

9 -ஆம் நாள் திருவிழா ( 11.03.2024) தேதி மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள் .

மாசிப்பெருந் திருவிழா 19.03.2024 தேதி காப்புக்களைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top