Close
ஜூன் 16, 2024 5:16 காலை

டாக்டர் அம்பேத்கர் விருது பெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகத்துக்கு புதுக்கோட்டையில் பாராட்டு விழா

புதுக்கோட்டை

பெ.சண்முகம்

தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் இருந்து போராடும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகத்துக்கு, தமிழ்நாடு அரசு 2023 -ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருதை வழங்கி பாராட்டியுள்ளது.

இந்நிகழ்வை கொண்டாடும் வகையில் நாளை(20.2.2024) செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மேலராஜவீதியில் உள்ள  வர்த்தகர் கழக சில்வர் ஹாலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இவ்விழாவில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் விஜி கிருஷ்ணன், எஸ்கேஎம் மாநில ஒருங்கிணைப்பாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர் கள் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதுக்கோட்டை. மாவட்டத் தலைவர்
எஸ்.பொன்னுச்சாமி,மாவட்டச்செயலர்ஏ.ராமையன்ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top