Close
அக்டோபர் 5, 2024 10:03 மணி

உலக தாய்மொழி தினம் (பிப் 21) இன்று…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- தமிழ்வளர்த்த நல்லறிஞர்கள்

1999-ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு 2000-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் அறிவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது ஒரு நிகழ்வு. 1947 -ஆம் ஆண்டு இந்தியா, இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாக பிரிந்தது. பாகிஸ்தான் உருவாவதற்கு சமயம் முக்கிய காரணம்.

பாகிஸ்தான் ,மேற்கு கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது.’உருது’ பேசக்கூடிய மேற்கு பாகிஸ்தான், ‘வங்காள மொழி’ பேசக் கூடிய கிழக்கு பாகிஸ்தான்.ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி. இந்த இரண்டும் விரைவில் தனித்தனி நாடாக பிரிந்துவிடும் என்றார். 1971-ல் அது நடந்தது.1948 -ஆம் ஆண்டு உருது பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டது.

அதுமுதல் கிழக்கு பாகிஸ்தானில் உருது மொழிக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கின. உருது மொழியுடன், வங்காள மொழியும் அலுவலக மொழியாக இருக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானில் போராட்டங்களை ஒடுக்குகின்ற வழி முறைகளை மேற்கொண்டது.

1952 -ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாள், டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தியபோது, போலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் சலாம், பர்கத், ரபீக், ஜாபர்,சபியூர் என்று ஐந்து மாணவர்கள் இறந்துபோவார்கள். அப்போது இது வரலாற்றில் அரிதான நிகழ்வாக கருதப்பட்டது.

குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் மத அடிப்படையில் ஒரே நாடாக இருந்தாலும் தங்களுடைய தாய்மொழியான வங்காள மொழியையும் கலாச்சாரத்தையும் விட்டுத்தர கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் விரும்பவில்லை என்பதுதான்.

பின்னர் பாகிஸ்தான் இரண்டு நாடாக பிரிவதற்கு இது தொடக்கப் புள்ளியாக அமைந்தது. கிழக்கு பாகிஸ்தானில் இறந்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. இன்று இந்த நாள் விடுமுறை நாளாக வங்காளதேசத்தில் உள்ளது. அவர்களின் தொடர் முயற்சியால் இப்போது உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிது.

“தமிழ்த் தகவோடும் தனிப்புகழோடும் அத்தமிழ்ப் பெரியார் வாழ்ந்த காலத்தில், அவரது மாணவர் ஒருவர் இலண்டனிலிருந்து ‘மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை; இந்தியா ‘என முகவரி எழுதி ஒரு கடிதம் அனுப்பினார். உரிய காலத்தில் அந்தக் கடிதம் செந்தமிழ்ப் பெரியார் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் வந்து சேர்ந்ததாம்.!(பக். 40)

எழுத்துச் செம்மல் குன்றக்குடி பெரிய பெருமாள் எழுதியுள்ள தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்  19 -ஆம் நூற்றாண்டில் பிறந்து தமிழ் வளர்த்த 100 நல்லறிஞர்களைப் பற்றிப் பேசுகிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில், கம்பருக்குப் பின்னர், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின், வாராது வந்துதித்த புலமைக் கதிரவன் எனத் தமிழறிஞர்கள் போற்றிய தெய்வப் புலமை பெற்ற தென்மொழிப் பெரும் புலவர், உ.வே.சாவின் ஆசிரியப்பிரான்,மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876) தொடங்கி, அவர் சொன்னார் இவர் சொன்னார் என ஏற்பது இகழ்ச்சி.

எவர் சொன்னாலும் என்ன சொன்னார்? எதற்காகக் சொன்னார் என்பதை ஆய்ந்து ஏற்பதே வளர்ச்சி” என்று சொன்ன அறிஞர் சாமி. சிதம்பரனார் (1900 – 1961) அவர்களுடன் பட்டியல் நிறைவடைகிறது. 26 வயதே வாழ்ந்த, காவடிச் சிந்து எனும் புத்திலயக்கியம் படைத்த சென்னிகுளம் அண்ணாமலைச் செட்டியார் (1865 – 1891) முதல், 99 வயது வரை வாழ்ந்த பிரெஞ்சு நூல்களை தமிழில் மொழி பெயர்த்த வரும், பல்கலை வல்லுநரும் துறவியுமான சுத்தானந்த பாரதியார் வரை இந்த நூலில் அடங்குவர். ஒவ்வொரு தமிழ்ச் சான்றோர் பற்றிய முழுத்தகவல்களையும் திரட்டி, 5,6 பக்கங்களில் நமக்குச் சித்திரமாக்கித் தந்துள்ளார் பெரிய பெருமாள். இது ஒரு வகையில் தமிழ் இலக்கிய வரலாறு.தமிழ் பேசும் யாவரிடமும் இருக்க வேண்டிய நந்நூல்.வெளியீடு-மதி நிலையம், சென்னை. 9444058086-பக் 496. விலை-ரூ.225.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top