Close
நவம்பர் 21, 2024 5:52 மணி

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் மூன்றாவது பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் மூன்றாவது பயிற்சி வகுப்பு தொடக்க விழா

புதுக்கோட்டை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் மூன்றாவது பயிற்சி வகுப்பு தொடக்கவிழா நடைபெற்றது.

விழாவிற்கு எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். கவிஞர் க.முருகபாரதி பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து பேசியதாவது: ஒவ்வாரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் ஒரு சிறப்பான திட்டமாகும். பசுமைபுரட்சியின் தந்தை பாரத் ரத்னா பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன்  அறிமுகப் படுத்திய திட்டம் இது.

குழந்தைகளை அறிவியல் பூர்வமாக சிந்திக்க தூண்டும். வித்தியாசமாக சிந்தித்து கேள்வி கேட்வர்கள் தான் மிகச் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாகியிருக்கின்றார்கள். பலருக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

நிகழச்சியில் பேராசிரியர் விஸ்வநாதன், திருவப்பூர் உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சி.முத்துலெட்சுமி, அறிவியல் ஆசிரியர் எம்.ராமஜெயம் ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப்பேசினர்.

இந்த மூன்றாம் கட்டப் பயிற்சியில் திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 30 மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக  ஆசிரியர் பா.மீனா அனைவரையும் வரவேற்றார். நிறைவாக உதவி ஆசிரியர் சி.பிரிட்டோ நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top