Close
மே 13, 2024 1:18 மணி

அக்கச்சிப்பட்டு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா

புதுக்கோட்டை

அக்கச்சிப்பட்டு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள் விழாவில் பாரதியார் முககவசம் அணிந்து கொண்டாடினர்

அக்கச்சிப்பட்டு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள் விழாவில் பாரதியார் முககவசம் அணிந்து கொண்டாடினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பாரதியார் பிறந்த நாள் விழா குறித்து பேசும்பொழுது: சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி டிசம்பர் 11, 1882 – பிறந்தார்.

ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடை மை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடைய தாகும்.தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும் பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத் தினார்.

தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனக் கவிபுனைந்தார். அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர் என்றார் அவர். இந்நிகழ்வில் மாணவர்கள் பாரதியார் முககவசம் அணிந்து உற்சாகமாக பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். தன்னார்வலர்கள் புவனேஸ்வரி, ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top