Close
நவம்பர் 21, 2024 6:21 மணி

செய்யாறு துரோணா பள்ளியில் அறிவியல் கண்காட்சி: படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்

துரோணா பள்ளி அறிவியல் கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாற்றில்  அமைந்துள்ள துரோணா பப்ளிக் பள்ளியில் “தேசிய அறிவியல்” தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் ‘சமூக விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் வகையில் “ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கண்காட்சி” பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்

பள்ளியின் முதல்வர் திரு. துரைமுருகன் கண்காட்சியை துவக்கிவைத்து, மாணவர்களின் படைப்புகளை ஆராய்ந்து பரிசுகள் வழங்கினார்.

இவ்விழாவில், மாணவர்கள் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு,  சோலார் சிஸ்டம், குறுங்கோள்கள், மனித உறுப்புகள், நுண்ணோக்கி, செயற்கை நுண்ணறிவு, ரொபாட்டிக்ஸ், சுற்றுச்சூழல், இயற்பியல், வேதியியல், உயிரியல், பாடத்தின் வரலாற்று நிகழ்வுகள், ஆகிய தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தி இருந்தனர்.

 

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் வேதியியல் ஆசிரியை திருமதி லாவண்யா மற்றும் இயற்பியல் ஆசிரியைகள் திருமதி எழிலரசி, செல்வி சௌந்தர்யா ஆகியோர் செய்திருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top