Close
நவம்பர் 22, 2024 12:26 காலை

புத்தகம் அறிவோம்… தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்

“தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் ” – ஆங்கிலத்தில் Folk of Tamilnadu என்று, நேஷனல் புக் டிரட்ஸ்ட்டுக்காக, ” பயண இலக்கியத்தின் தந்தை ” என்றழைக்கப்படும் சோமலே – சோம.லெட்சுமனன் செட்டியார் அவர்களால் எழுதப்பட்டது.

Folklore India Series என்ற தலைப்பில், இந்தியாவின் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிற மாநில மக்களின் அடிப்படைத் தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு மாநிலத்தைப் பற்றியும், நேஷனல் புக் டிரஸ்ட் நூல்களை தயாரித்தது. அப்படி 1975 ல் வந்த புத்தகம் இது. இது இந்தியாவின் பல் வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கருவுற்ற பெண்ணைப் பற்றி

கரு உற்பத்தியான பிறகு, ஒரு பெண்ணை (அவள் பிள்ளை பெரும் வரை)போட்டோப் படம் எடுக்கக் கூடாது என்பர். அவர்கள் விரும்பும் உணவு வகைகளையும் ஏனைய பொருள்களையும் மறுப்புக்கூறாமல் வாங்கிக் கொடுப்பதும் மரபு. அவளுடைய வேண்டுகோள்களை நினைவேற்றாவிடில், கருவில் உள்ள குழந்தைகளுக்கு காதில் ஏதாவது குறைபாடு இருக்கும், அல்லது நோய் ஏற்படலாம் என்று சொல்லுவார்கள்.
(பக். 83).

உறவு முறை

தாயார் மற்றும் மனைவி வழி உறவினரிடம் பற்றுதலும் நம்பிக்கையும் இருப்பது, தமிழ் மக்களிடையே வாழையடி வாழையாக வந்துள்ள வழக்கம் ஆகும். பங்காளிகள் கூட்டாக நடத்தும் தொழில் நீண்டநாள் நீடிப்பதில்லை, காலப்போக்கில் அது குலைந்து, அதற்குப் பதிலாக, பெண் வழி உறவினர் ஒருவர்க்குப் பங்கு வைத்து புதிய அமைப்பு உருவாகி விடுவதை சர்வசாதாரணமாகக் காணுகின்றோம். முத்துக் குளிப்பது பயங்கரமான, ஆபத்து நிறைந்த தொழில், உயிருக்கும் மரணத்துக்கும் போராடும் அந்நிலையில் முத்துக் குளிப்பவன் தன் மைத்துனரைத் தான் நம்புகிறான்.
(பக். 116).
தமிழ் மக்களின் நிலம், பண்பாட்டுக் கூறுகள், உறவு முறைகள், விழாக்கள் (முஸ்லீம்,கிறிஸ்தவம் உட்பட) நம்பிக்கைகள்(முஸ்லீம், கிறிஸ்தவம் உட்பட) வாய்மொழி இலக்கியம், பாமர மக்களின் இசை நடனம் என்று தமிழ் மக்களின் அனைத்து அடிப்படை கூறுகளைப் பற்றி பேசுகிறது இந்த நூல்.

தமிழகத்தைப் பற்றி அறிய விரும்புகிறவர்கள் முதலில் வாசிக்க வேண்டிய நூல் இது. தற்போது முல்லை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முல்லை பதிப்பகம்,சென்னை.9840358301.பக்கம்.304, ரூ.300/.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top