Close
நவம்பர் 25, 2024 7:12 காலை

சர்வதேச மகளிர் தினம்: தபால் பட்டுவாடா செய்யும் பெண் ஊழியர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை

சர்வதேச மகளிர் தினம். இத்தினத்தை ஒட்டி "புதுக்கோட்டை மரம் நண்பர்கள்"சார்பில் நான்காவது ஆண்டாக, புதுக்கோட்டை நகரில் தபால் விநியோகம் செய்யும் "பெண் தபால்காரர்களுக்கு பாராட்டு தெரிவித்த நிர்வாகிகள்

சர்வதேச மகளிர்தினத்தை(மார்ச் 8.) ஒட்டி “புதுக்கோட்டை மரம் நண்பர்கள்“சார்பில் நான்காவது ஆண்டாக, புதுக்கோட்டை நகரில் தபால் விநியோகம் செய்யும் “பெண் தபால்காரர்களுக்கு பாராட்டி வாழ்த்தும் நிகழ்ச்சி  புதுக்கோட்டை மேலராஜவீதி யிலுள்ள தலைமைத் தபால் நிலைத்தில்  தலைமை தபால் நிலைய அலுவலர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில்,  மரம் நண்பர்களின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் எட்வின் பேசுகையில், மழை, வெயில் என்று பாராமல், தங்களுடைய பணியைச் செய்யும் நீங்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். ஆணுக்கு நிகராக சிறப்பாக பணியாற்றும் உங்களுக்கு இந்த மகளிர் தினத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மேனாள் காவல் துறை அமைச்சுப்பணி அலுவலர் சுதந்திரராஜன் பேசுகையில், உலகிலேயே மிகவும் பழைமையான அஞ்சல் துறை இந்திய அஞ்சல் துறையாகும். அதுவும் இல்லம் தோறும் தபால்களை கொண்டு சேர்க்கும் பணி இந்தியாவில் இன்றும் திறம்பட நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணியை மிகச் சிறப்பாக ஆண்களுக்கு இணையாக செய்யும் பெண்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், மரம் நண்பர்கள் அமைப்பின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சா. விஸ்வநாதன் , செயலர் பழனியப்பா கண்ணன், இணைச் செயலாளர் சா. மூர்த்தி, உறுப்பினர்கள் பாரத விலாஸ் கிருஷ்ணமூர்த்தி, ராஜூ, பொறியாளர் ரியாஸ்கான், தினேஷ், சாஸ்தா கிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்று மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பெண் தபால்காரர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பெண் தபால்காரர்கள் மட்டுமல்லாமல், ஆண் தபால்காரர்களும்,  தபால் அலுவலக பெண் அலுவலர்களுக்கும் இந்நிகழ்வில் மரியாதை செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top