Close
நவம்பர் 21, 2024 5:03 மணி

சோழவந்தானிலிருந்து கோவை, திருப்பூருக்கு புதிய பேருந்து..!

சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருப்பூர் மற்றும் கோவை பகுதிக்கு ஆரப்பாளையத்தில் இருந்து செல்லும் வகையில் புதிய பெருந்தினை சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. துவக்கி வைத்தார்.

ஏற்கனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, ஏழு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, திருச்செந்தூர், ராமேஸ்வரம், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கோவை திருப்பூர் பகுதிக்கு கூடுதலாக இரண்டு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான துவக்க விழா சோழவந்தான் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ., புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், பேரூராட்சித் தலைவர்கள் சோழவந்தான் எஸ். எஸ். கே. ஜெயராமன், வாடிப்பட்டி பால்
பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன்,பசும்பொன் மாறன், பொதுக்
குழு உறுப்பினர் ஸ்ரீதர், திரு வேடகம் சிபிஆர் சரவணன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வெற்றிச் செல்வன், பேரூராட்சி துணைத் தலைவர்கள் சோழவந்தான் லதா கண்ணன்,  சோழவந்தான் பேரூராட்சி பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின் மற்றும் சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் மற்றும் அதிகாரிகள் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top