Close
நவம்பர் 24, 2024 6:39 மணி

புத்தகம் அறிவோம்… டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

கல்வி, சுதந்திரம், பொறுப்புடைமை ஆகியன தனி மனிதனிடமும் அவனது இனத்திடமும் பொதிந்திருக்கும் சிறந்ததை வெளிக்கொணர்கின்றன. சாதி, கொள்கை அல்லது நிறம் அனைத்தையும் தாண்டி அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் இது பொருத்தமானது – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி(பக்.33).

தேவிகாவின் “முத்துலட்சுமி ரெட்டி,” முதலில் ஆங்கிலத்தில் வெளிவந்து கவனம் பெற்றது. அப்போதே இது தமிழிலும் வர வேண்டுமென்று பலரும் விரும்பினர். இப்போது தமிழிலும் வெளிவந்து விட்டது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு ஓராண்டாகிய நிலையில் நான் தற்போது தான், புதுகோட்டையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.

தமிழ் மொழியாக்கம் மிகச் சிறப்பாக உள்ளது. மூலநூல் ஆசிரியரின் உணர்வுகளைத் தாங்கி அப்படியே வந்துள்ளது. முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கையில் அறியப்படாத பல தகவல்களை இந்த நூலின் வழி அறியலாம்.

முத்துலட்சுமி ரெட்டி கல்வி பெருவதற்கு மேற்கொண்ட முயற்சிகள், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தது, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியது, அவ்வை இல்லம் கண்டது – இவை யாவும் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலைப் படித்தபின், நூல் ஆசிரியர் தேவிகாவின், “இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்க முடியுமா, இவ்வளவு துணிச்சலோடு போராடியிருக்க முடியுமா, இந்த அளவிற்கு நவீனமாகவும், புரட்சிகரமாகவும் ஒருவர் அப்போதே சிந்தித்து செயல்பட்டிருக்க முடியுமா என்று வியக்கவும், ஏங்கவும் வைக்கிறார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ” என்ற வரிகள் உண்மை என்றே தோன்றும்.ஒரு உன்னதமான ஜீவனின் உயிரோட்டமான படைப்பு இந்த நூல்.அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.வெளியீடு:கிழக்கு பதிப்பகம்,சென்னை.044 – 42009603.பக்.168.ரூ.200/.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top