Close
நவம்பர் 24, 2024 2:20 மணி

வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல்.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை 20.3.2024 முதல் 27.3.2024 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்களை ஆன்லைன் பதிவு செய்திடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கான இணையதளம் http://suvidha.eci.gov.in , என்ற இணையதள முகவரி ஆகும்.
ஆனால் வேட்பு மனுவிற்கான கடைசி நாளுக்கு முந்திய நாள் வரை மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். ஆன்லைனில் அபிடவிட், (Affidavit) பதிவேற்றும் செய்யும் வசதியும் ஆன்லைனில் வைப்புத் தொகை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் ஆன்லைனில் வேட்பு மனுவினை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு உரிய ஆவணங்களுடன் நேரில் வேட்பாளரோ, வேட்பு மனுவினை முன்மொழிபவரோ சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக ஆன்லைன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் காலை 11:00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே ஆகும்.

காலை 11 மணிக்கு முன்னரும் மாலை 3 மணிக்கு பின்னரும் வர பெரும் வேட்பு மனுக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை அவர்களிடமும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவி அலுவலர் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் திருவண்ணாமலை அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை அளிக்கலாம்.

மேலும் ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடமும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் ஆரணி வருவாய் கோட்ட அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை அளித்திடலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top