Close
நவம்பர் 22, 2024 5:19 காலை

கந்தர்வகோட்டை அருகே  மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் தெற்கு வாண்டான் விடுதி (தெற்கு) தொடக்கப் பள்ளியில் நடைபெற்றமாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தெற்கு வாண்டான் விடுதி (தெற்கு) தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் சின்ன ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக  கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பங்கேற்று கொடி அசைத்து பேரணியை தொடக்கி வைத்து பேசியதாவது:

அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும். மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு வகையான திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தெற்கு வாண்டான்விடுதி ( தெற்கு) தொடக்கப் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.

பள்ளியில் தொடங்கிய பேரணி தெற்கு தெரு, ஒதியடி புஞ்சை, உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பெற்றது.இப்பேரணியில் சேர்ப்போம் சேர்ப்போம் மாணவர்களை அரசு பள்ளிகள் சேர்ப்போம்,பெறுவீர் பெறுவீர் சம உரிமை பெறுவீர்,சேர்ப்போம் சேர்ப்போம், ஐந்து வயது முடிந்த குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்,

மாற்றுவோம் மாற்றுவோம் கல்வியால் உலகத்தை மாற்றுவோம், ஊக்குவிப்போம் ஊக்குவிப்போம் பெண் குழந்தைகளை கல்வி கற்க ஊக்குவிப்போம்,பெறுவோம் பெறுவோம் கல்வியால் உயர்வு பெறுவோம்,மாற்றுவோம் மாற்றுவோம் கல்வியால் உலகத்தை மாற்றுவோம்,

அநீதியை எதிர்த்துப் போராட கல்வியே சிறந்த ஆயுதம்,இன்றைய கல்வி நாளைய உயர்வு,சிறந்த கல்வி சிறந்த தேசத்திற்கு சமம்,படிப்போம் படிப்போம் ஒழுக்கத்தையும் சேர்த்து படிப்போம்,கற்போம் கற்போம் வாழ்வின் அடிப்படையை கற்போம் என்ற பதாகைகளை ஏற்றி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆசிரியர் ஜாய்சிராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி பேபி ஷாலினி, மற்றும் பெற்றோர்கள் சிவரஞ்சனி, மாரிக்கண்ணு, வெண்ணிலா, கவியரசி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top