Close
மே 12, 2024 1:05 காலை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வீரடிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே தமிழ்நாடு அறிவியல் இயக்க தான் சார்பில் வீரடிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினத்தில் பேசுகிறார், அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் முத்துக்குமார்

கந்தர்வகோட்டை அருகே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வீரடிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் வீரடிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் வேதநாயகி தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முத்துக்குமார், துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும் உலக தண்ணீர் தினம் குறித்து பேசியதாவது

ஐக்கிய நாடுகள் சபையின் உலக தண்ணீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல், விவசாயம், சுகாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாளில் அல்லது அதைச் சுற்றி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதுமையான செயல்களை ஊக்குவிக்கவும், தண்ணீர் தொடர்பான ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை ஐக்கிய நாடுகள் சபை முன்மொழிகிறது. ஒவ்வொரு ஆண்டும் கருப்பொருள் முக்கியமாக சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது, இது நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்துப்போகிறது என்று பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிர் திறனறிவுத் தேர்வு இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா உலக நீர் தினத்திற்கான அமைதிக்காக நீரை மேம்படுத்துதல் என்ற கருப்பொருள் குறித்து கருத்துரை வழங்கினார்.

துளிர் திறனறிவு தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும், தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் வெற்றி மாணவிகள் பூர்விகா, ஆர்த்தி  ஆகியோருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சால்வை  அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சுஜா,இராமலெட்சுமி, ராகத்தம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணித ஆசிரியர் ஹெலன்தனமேரி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top