Close
நவம்பர் 21, 2024 5:48 மணி

100% வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம், கோலமிட்டு விழிப்புணர்வு பிரசாரம்…

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், வருவாய்த் துறையும் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்கு அளிக்க வேண்டும் என துண்டு பிரசுரமும், கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், காட்டு நாவல் கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், வருவாய்த் துறையும் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என கோலங்கள் வரைந்தும், துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்விற்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

இந்திய பாராளுமன்றத்திற்கு 18 -ஆவது பொது தேர்தல் நடைபெற இருக்கிறது.அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகதேர்தல் விழிப்புணர்வு மூலம் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும்.18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு தேர்தல் ஆணையம் வாக்களிக்க ஏற்படுத்தியுள்ளது வாய்ப்புகள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை காட்டு நாவல் கிராமத்தில் கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்திய பொது தேர்தல்கள் அறிக்கை வெளியிடப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுக்கு வந்துவிடுகிறது ‌என்றும்,
பொது தேர்தலை சுமூகமாகவும், ஆரோக்கியமாகவும் நடத்திட உதவுகிறது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்தேர்தல் துணை வட்டாட்சியர் பால்பாண்டி, தேர்தல் உதவியாளர் செந்தில்குமார், கல்லாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, காட்டு நாவல் கிராம நிர்வாக அலுவலர் செங்கதிர் செல்வன், காட்டு நாவல் அறிவியல் இயக்க கிளைத் தலைவர் சுமதி, செயலாளர் சரண்யா, பொருளாளர் காயத்ரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். மேலும் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top