Close
ஏப்ரல் 4, 2025 10:37 மணி

புத்தகம் அறிவோம்…ஆசௌ சாத்யா சார தர்பணம்(தீட்டு விவரம்)

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- தீட்டு விவரம்

என்ன தான் “சநாதனம் ” வேண்டாம் என்று சொன்னாலும், நடைமுறையில் சநாதனம் அது தன் இருப்பை வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த தீட்டு விவகாரமும்.

சாதியைச் சொல்லி தீட்டு என்றவர்கள், வீட்டில் நிகழும் சில நிகழ்வுகளுக்கு தீட்டு என்று சொல்லி உறவுகளை விலக்கி வைக்கிறார்கள். அந்தத் தீட்டுகளின் வகை -பிறப்புத் தீட்டு, குறைப் பிரவச தீட்டு, இரட்டைப் பிரவச விஷயம், இறப்புத் தீட்டு, தீட்டுச் சேர்ச்சை – மற்றும் அதைக் கடைபிடிப்பதற்காக வழிமுறைகள் யாவற்றையும், தொடர்புடைய புராணங்களை ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் தான் இந்த நூல்.

கிராமங்களில்,உயர் சாதியில் ஒரு இறப்பு என்றால் அதைச் சொல்லி அவர்கள் வீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், தீட்டு முடிகிறவறை உணவருந்த மாட்டார்கள். சொல்லப்போனால் அவர்களை ஒதுக்கி வைக்க இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு.

தமிழ்நாடு
புத்தகம் அறிவோம்

இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளபடி இப்போது யாரும் முழுமையாக கடைபிடிப் பதில்லை என்றாலும், காலத்திற்கேற்றபடி சில மாற்றங்களுடன் கடைபிடிக்கப் படுகிறது என்பது உண்மை.உதாரணத்திற்கு, ஒருவர் இறந்தால் 16 நாட்கள் துக்கம் கேட்பது இருந்தது. தற்போது சில காரணங்களுக்காக எட்டு நாளில் முடித்துக் கொள்கிறார்கள். விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் முனைவர் சுந்தரம் கடந்த  1996 -ல்  எழுதிய இத்தொகுப்பை இலவசமாக வெளியிட்டவர் சென்னை தம்பு செட்டி தெரு, எஸ். கிருஷ்ணமாச்சாரி.

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top