Close
மே 10, 2024 5:26 மணி

புத்தகம் அறிவோம்.. இந்திய இலக்கிய சிற்பிகள்…வா.வே.சு.ஐயர்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்.. வா.வே.சு.ஐயர்

பழக்கம் வழக்கம்-“ஒரு மனிதனோடு அல்லது தொழிலில், நெடு நாள் பழகி வருவதில் இருந்து பழக்கம் ஏற்படுகிறது”

“ஒரே காரியத்தை அநேக தடவை செய்து வந்தால் அந்தக் காரியம் செய்வது வழக்கமாகி விடுகிறது””மனிதன் துஷ்டர்களோடு பழகினால் தானும் துஷ்டனாகிவிடுகிறான்”

“காபி, தேயிலை, புகையிலை, அபினி, கஞ்சா, கள், சாராயம் முதலிய விஷயார்த்தங் களை உபயோகிப்பது ஒருவனுக்கு வழக்கமாகிவிட்டால் அவைகளால் வரும் நோய்களை அனுபவிக்கையில் கூட அவனுக்கு அந்த வழக்கத்தை விடுவதில் அசாத்தியமாகி விடுகிறது”

“ஒரு தொழிலில் தேர்ச்சியடைய வேண்டுமானால் இடையறாது அந்தத் தொழிலைப் பழகி வர வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப் பழக்கம். “

” தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்கிறார்கள். ஜனங்கள் இந்தப் பழமொழியை வழக்கத்தைக் குறிக்கிறதுக்குத்தான் தவறாக உபயோகிக்கிறார்கள். வ.வெ.சு.ஐயர்(பக். 110).

வ.வே.சு.ஐயர் -வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்,சுதந்திரப் போராட்ட வீரர்,தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் (குளந்தங்கரை அரசமரம்),மொழி பெயர்ப்பாளர்,கம்பராமாயண ஆய்வாளர் என்று பண்முகம் கொண்டவர். அவரின் பிறந்தநாள் இன்று (2.4.1881 – 3.6.1925).10 மொழிகளைக் கற்று,45 ஆண்டுகளே வாழ்ந்த அவர் தேசத்திற்கும், தமிழ் மொழிக்கும் செய்த சாதனை மகத்தானது.திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். கம்பராமாயணத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் திறனாய்வு செய்தவர்.

இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில்சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ளகோ. செல்வம் அவர்களின் “வ.வெ.சு.ஐயர் ” ஐயரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், இலக்கிய உலகத்தை முழுமையாகவும் அறிய உதவும் நூல்.

ஐயரின் பல்வேறு குறிப்புகள் தாங்கிய நோட்டுப் புத்தகத்தை “நோட்டுப் புத்தக இலக்கியம்” என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். லண்டனில் வசித்த காலத்தில் எழுதிய லண்டன் டைரி, மற்றும் லண்டன் கடிதங்கள் அவருடைய இலக்கியம் ஆர்வம் மற்றும் தேச பக்தியைப் பற்றி அறிய உதவுகிறது.

இன்றும் அவரை விமர்சனம் செய்த வண்ணம் இருக்கும் நிகழ்வு சேரன்மாதேவி “பரத்வாஜ் ஆஸ்ரமத்தில் ” வேற்றுமை பாராட்டியதாகச் சொல்வது. அந்த ஆஸ்ரம குழந்தைகளுடன் அம்பாசமுத்திரம் அருவியை காணச் சென்றபோது நீரில் மூழ்கிய தனது மகள் சுபத்ராவைக்காப்பாற்றப் போய் இவரும் நீரில் மூழ்கிப் போனார். இன்னும் தமிழுக்கு, தேசத்திற்கு தொண்டு செய்ய காத்திருந்த பெருமகனை அருவி தனதாக்கிக் கொண்டது. விலை ரூ.50/.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top