Close
மே 20, 2024 10:07 காலை

அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் பட்டய படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்

திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி

தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கலில் இயங்கி வரும் கருவி பொறியியல் பயிலகத்தில் வேலை வாய்ப்பு சார்ந்த அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட மூன்றாண்டு இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) பட்டய படிப்பு 1982 ஆண்டு முதல் தமிழக அரசு விதிமுறைகளின்படி கல்வி கட்டண சலுகை, கல்வி உதவித்தொகை, பேருந்து கட்டண சலுகை ஆகிய சலுகைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிலகத்தில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டய படிப்பில் மாணவர்கள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் தற்பொழுது, இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் https://www.tnpoly.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்கல்லுரியின் இணையதள குறியீட்டு எண்-413. இணையத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2024 ஆகும்.
நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையில் பன்னிரண்டாம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த பட்டய படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்து, இவ்வாய்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
மேலும், இது குறித்து, விவரங்களுக்கு

முதல்வர்,

கருவி பொறியியல் பயிலகம்,

மில்ஸ் ரோடு, திண்டுக்கல்-624003

என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 0451-2471301 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top