Close
நவம்பர் 22, 2024 10:03 காலை

சிங்க நடை போடும் திருச்சி தொகுதி சுயேச்சை வேட்பாளர் தாமோதரன்

திருச்சி

தேர்தல் பிரசாரத்தில் கலக்கும் சுயேச்சை வேட்பாளர் தாமோதரன்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் மற்றும் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த 35 வேட்பாளர்களில் ஒருவர்தான் எஸ். தாமோதரன். வேட்பாளர் தாமோதரன் திருச்சியில் கிராமாலயா என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை கடந்த 1989 ஆம் ஆண்டு தொடங்கினார்.

35 வருட காலமாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார கழிப்பிட வசதி, பள்ளி நல கல்வி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது தான் இவரது தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.

தான் சார்ந்த தொண்டு நிறுவனங்களின் மூலம் மக்களை நேரடியாக அன்றாடம் சந்தித்து அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுத்து வந்தார். இவரது சமூக சேவையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இந்த விருதினை பெற்று உள்ளார் தாமோதரன்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்த தாமோதரன். தற்போது தேர்தல் பாதைக்கு திரும்பி உள்ளார். அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இந்த முதல் தேர்தலே மற்ற முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்கு ஈடாக உள்ளது. இவரது அன்றாட பிரச்சார யுத்திகள் அரசியல் கட்சி வேட்பாளர்களை கலங்கடிக்க செய்துள்ளது. அதற்கு காரணம் இவருடைய செயல்பாடுகள் தான்.

அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு நிகராக திறந்தவேனில் பிறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்வது இவரது முக்கிய பிரச்சார யுத்தியாக உள்ளது. அத்துடன் திருச்சி வயலூர் சாலையில் தலைமை தேர்தல் அலுவலகத்தையும் திறந்து உள்ளார்.

தனது பிரச்சாரத்தின் போது முக்கியமாக பொதுமக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அப்போது கடந்த ஆறு ஆண்டுகளில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு மாதவிடாய் சுகாதார கல்வி விழிப்புணர்வு கொடுத்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் பெண்கள் நலனுக்கு ஏற்ப செயல்படுத்தி வரும் திட்டங்களை கூறியுள்ளார்.

அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட தன்னார்வலர்கள் மற்றும் சமுதாய நல ஆர்வலர்களின் துணையோடு 1985 முதல் பள்ளிகளிலும் கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார்.

இவரது வாக்குறுதிகளில் முக்கியமானது காவிரி- குண்டாறு- வைகை நதி இணைப்பை பொருத்தப்படுத்தி பல்லாயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்கு பாடுபடுவேன் என்பதாகும். மேலும் கிராமப்புறங்களில் கான்கிரீட் தளத்துடன் அனைவருக்கும் வீடுகள் கட்டி கிடைக்க பாடுபடுவேன் என்று கூறி வருகிறார். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இன்றி புதுக்கோட்டை மாவட்டத்திலும் இவரது தொண்டு நிறுவன பணிகள் ஏற்கனவே பல கிராமங்களில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக இவர் பிரச்சாரத்திற்கு செல்லும் கிராமங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள். அந்த கிராமத்து இளைஞர்கள் இவரை பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் அழைத்து செல்கிறார்கள். இது அன்றாட நிகழ்வாக இருந்து வருகிறது.பொதுவாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தான் இந்த ஆரவாரங்கள் இருக்கும். ஆனால் சுயேச்சை வேட்பாளருக்கு காணப்படும் இந்த ஆதரவு மற்ற வேட்பாளர்களை கலங்க வைக்கிறது.அதற்கு காரணம் இவரது சமூக சேவை தான்.

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்த போது வெள்ளரிப்பட்டி முள்ளிப்பட்டி ஆகிய கிராமங்களில் இவர் பிரச்சாரத்திற்கு சென்றார். அப்போது காவிரியின் கடைமடை பகுதியான இந்த கிராமங்களுக்கு காவிரி நீர் கிடைக்க பாடுபடுவேன். காவிரி- குண்டாரறு- வைகை இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீர்வேன் என வாக்குறுதி அளித்தார்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தங்களது அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக பல கோரிக்கைகளை வைத்தனர். அந்த கோரிக்கைகளை நான் பாராளுமன்ற உறுப்பினரானால் பாராளுமன்றத்தில் பேசி நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்தார். மேலும் தொண்டு நிறுவனங்களின் மூலம் செய்யக் கூடிய பணிகளையும் செய்வதற்கும் உறுதி அளித்துள்ளார்.

இந்த கிராமங்களில் தாமோதரனை கிராம இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் முன் செல்ல  அழைத்து சென்றனர். அவரது சின்னமான கேஸ் ஸ்டவ் சின்னத்திற்கு ஆதரவளிக்கும்படி கேட்டு இளைஞர்கள் பிரச்சாரம்  செய்து வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top