Close
நவம்பர் 22, 2024 6:53 காலை

பிளஸ் 2 தேர்வு: வாடிப்பட்டி பகுதி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நிறைவடைந்தது

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில், உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விவரம் வருமாறு:
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தேர்வு எழுதிய மாணவர்கள் 102. தேர்ச்சி பெற்றவர்கள் 94, இதில் 92 சதவிகிதம் பெற்றனர். எஸ்.சூரியபெருமாள் 518, கோவர்தனன் 514,ராஜீவ் 491 மதிப் பெண் எடுத்து தேர்ச்சி பெற்றனர் என்று தலைமையாசி ரியர் இனிக்கோ ஏட்வர்டு ராஜா தெரிவித்துள்ளார்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 139 மாணவிகள் தேர்வு எழுதியதில் 138 மாணவிகள் 99.3 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றனர். டி.காவியா 551, ஏ அழகிய லாவண்யா 547 ரிஷப பானு 542, மேலும் பொருளாதாரத்தில் இரண்டு மாணவர்களும், கணினி பாடத்தில் ஒரு மாணவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று தலைமை ஆசிரியர் திலகவதி தெரிவித்தார்.

பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல் நிலைப் பள்ளியில் 52 மாணவர்கள் தேர்வு எழுதி 51 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 92 சதவிகிதம் பெற்றுள்ளனர். எஸ். பூர்ணிமா 530, எம்.மதன் பாபு 502, ஏ. முத்து ஐயப்பன் 487 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று தலைமை ஆசிரியர் விஜய குமார் தெரிவித்துள்ளார்.

தாய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 139 மாணவர்கள் தேர்வு எழுதி 139 மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றனர். இதில் சி கீர்த்திகா 582, எஸ். ஹரி ரேவந்த் 576, ஜே.ஷர்மிளா 574 மதிப்பெண்கள் பெற்றனர்.

இதில் கணிதத்தில் 2, கணிப்பொறியில் 7, வணிக கணிதத்தில் 1, வணிகவியலில் 3, விலங்கியலில் ஒரு மாணவர் என நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று பள்ளி முதல்வர் ஜெகதீசன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top