Close
நவம்பர் 21, 2024 10:40 மணி

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்

திருவண்ணாமலை போக்குவரத்து துறை மற்றும் தமிழ்நாடு அரசின் சட்டம் ஒழுங்கு துறை ஆகியவை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையிடமிருந்து 250 சன் கிளாஸ்கள் பெற்றன.
இவைகள் கோடையில் தொடர்ச்சியான சூரிய வெப்பத்தின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. காவலர்களுக்கு சன் கிளாஸ்களை வழங்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசுகையில்,
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மேற்கொண்ட இந்த முயற்சியினை பாராட்டுகிறேன். ஒரு சன் கிளாஸ் அணிவது பேஷன் என்பதை தவிர சிறந்த சன் கிளாஸ்களை தேர்ந்தெடுப்பதால் அவை கடுமையான சூரிய தாக்கத்திலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. சூரிய கதிர்களில் ஏற்படும் தாக்குதலிலிருந்து நமது போக்குவரத்து காவல்துறையினருக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மேற்கொண்ட இந்த கவனிக்கத்தக்க நடவடிக்கையை பாராட்டுகிறேன் என்று பேசினார்.
தொடர்ந்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் ஐசக் ஆபிரகாம் கூறுகையில், கண்கள் தம் உடலின் மிக உணர்ந்து திறன் வாய்ந்த உணர்ச்சி உறுப்பு ஆகும். இவை நமது தோலை போலவே சூரிய ஒளிக் கதிர்களினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு சூரியனின் புற ஊதா கதிர்களை பார்ப்பது மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.
நாள் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் காவல்துறையினர் வெளியிடங்களில் இருப்பதால் சூரியனிலிருந்து வரும் ஒளியானது கண் அசதி மற்றும் தலைவலியையும் ஏற்படுத்தக் கூடும் நல்ல சன் கிளாஸ்கள் நம் கண்களுக்கு ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தின் தாக்கத்தை குறைக்கிறது.
கண் கூச்சத்தை தடுக்கிறது மற்றும் கண்களை சுற்றி உள்ள உணர்திறன் பகுதிகளை பாதுகாக்கிறது. சமூகத்தின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் பாதுகாக்க காவல்துறையினர் பாடுபடுவதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை எங்களது இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது என கூறினார்
இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், டாக்டர் அகர்வால் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்துக் காவல் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top