Close
நவம்பர் 22, 2024 6:55 காலை

உஜ்ஜைனி மகா காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்:

காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ உஜ்ஜயினி மகா காளியம்மன் கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது..

மங்கள இசை, யுடன் விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, ஜெப பாராயணம், தீப ஆராதனை நடந்தது.
இரண்டாம் கால யாகசாலை பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், வருண ஹோமம், சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, தனலட்சுமி பூஜை: பாபனாபிஷேகம், திரவியாகுதி நடந்தது.

மூன்றாம் காலை யாகசாலை பூஜை, ருத்ர ஜெபம் சமகம், பாராயணம், புருஷ சூக்தம். எந்திர பிரதிஷ்டை, கோபுர கலசம் பிரதிஷ்ட பூஜை முடிந்தவுடன் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top