Close
நவம்பர் 23, 2024 11:38 மணி

காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டி கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் 

தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (11.07.2024) தருமபுரி பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில், 2500 முகாம்களின் மூலம் 15 அரசுத்துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பி.புதுப்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார் .
முகாமில் முகாமில் கோரிக்கை மனு அளித்த 2 பயனாளிகளுக்கு வீட்டுவரி ரசீதுகளையும், ஒரு பயனாளிக்கு பட்டா மாறுதல் உத்தரவினையும், 2 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்ற உத்தரவினையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

மேலும் 82 பயனாளிகளுக்.கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.1,50,000/- மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களையும், 15 பயனாளி களுக்கு ரூ.11,40,000/- மதிப்பிலான சாலை விபத்து நிவாரணத்தொகையினையும், 4 பயனாளி களுக்கு ரூ.3,866/- மதிப்பிலான வேளாண் இடுபொருள்களையும் என மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ.12,93,866/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை நிதிஅமைச்சர் வழங்கினார்.

விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது ,தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறுமக்கள் பயன்பெறும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதிகாரத்தை நோக்கி மக்கள் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, மக்களிடம் சென்று மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில், மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகர்ப்புற பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் தற்போது கிராமப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில் மாவட்டத்தில் இருக்கக் கூடிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள், சேவைத்துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களைப் பெற்று, உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளில் 69 முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” முகாம்கள்
நேற்று நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தனிநபர்மற்றும் பொது நலன் சார்ந்த குறைகளை இம்முகாம்கள் மூலம் மனுக்கள் அளித்து பயன் பெறலாம் என்று கூறினார்
இந்த முகாமில் வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துமாரி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பொன்னுத்தம்பி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் .செந்தில், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத்துணைத்தலைவர் .ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பி.புதுப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அய்யம்மாள் துணைத் தலைவர்ஜெய் கணேஷ், ஒன்றிய செயலாளர் கண்ணன் உட்பட பலர் பங்கேற் றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top