Close
ஏப்ரல் 5, 2025 12:56 மணி

அருள்மிகு  பூமாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா

சிவகங்கை

சிவகங்கை தெப்பக்குளத்தில் நீராடி, கரகம், பால்குடம், தீச்சட்டி முளைப்பாரி சுமந்து கோயிலுக்கு சென்ற பக்தர்கள்

சிவகங்கை நகர், சேதுபதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு பூமாரியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பெரும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகங்கை நகர் சேதுபதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு  பூமாரி அம்மன் திருக்கோயிலில் ஆடி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த 6-ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கிய இத்திருவிழாவில் 7ஆம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சியும், 11 -ஆம் தேதி பூத்தட்டு திருவிழாவும் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை நகர் சேதுபதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூமாரி அம்மன்

விழாவின் முக்கிய  நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டி கோயிலுக்கு நேர்ந்துகொண்டு விரதம் இருந்த பக்தர்கள் சிவகங்கை தெப்பக்குளத்தில் நீராடி, கரகம், பால்குடம், தீச்சட்டி முளைப்பாரி சுமந்து தேரோடும் வீதி வழியாக மேளதாளங்கள் முழங்க வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விவசாயம் செழிக்கவும், விரைவில் திருமணம் கைகூடவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும் நடைபெற்ற திருவிழாவில் சிவகங்கை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top