Close
நவம்பர் 22, 2024 6:45 காலை

அமாவாசை நாளில் அகதிகளாக வெளியேறும் விழா என அழைப்பிதழ் அடித்து  ஆட்சியரிடம் வழங்கியதால் பரபரப்பு

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தாம்பூழத்தட்டுடன்  அழைப்பிதழ் அளித்த  விவசாயி.

சிவகங்கை: வரும் அமாவாசை நாளில் ஊரைவிட்டு அகதிகளாக வெளியேறும் விழா என அழைப்பிதல் அடித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனி பகுதியை சேர்ந்த ராமராஜன் மகன் பாக்கியராஜ்.  இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை சிலர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் நிலத்தை மீட்டு தர வேண்டி காவல் நிலையம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில்  எங்களுக்குச்சொந்தமான நிலத்தை விட்டு அகதிகளாக வெளியேறும் விழா என்ற தலைப்பிட்டு,  நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 18 ம் நாள் 3.9.2024 -ஆம் தேதி செவ்வாய் கிழமை சர்வ பட்சமும் கூடிய அமாவாசை நாளில் காலை 10.30 மணிக்கு மேல் 11.20 மணிக்குள்  எங்கள் சொந்த நிலத்தை ஒப்படைத்து விட்டு நாங்கள் அகதிகளாக வெளியேறும் விழா நடைபெற இருப்பதாக  அழைப்பிதழ் அடித்து மஞ்சள் தடவி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித்தை நேரில் சந்தித்து தாம்பூல தட்டுடன்அழைப்பிதழ் அளித்தார். இதனால் அப்பகுதியில்  பரபரப்பு நிலவியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top