சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 916 பேர் மனு அளித்தனர்.
காளையார்கோவில் ஒன்றியம், மறவமங்கலம் ராணி ராஜலெட்சுமி மஹாலில், ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. காளையார்கோவில் வட்டம், மறவமங்கலம் உள்வட்டம் மற்றும் சிலுக்கப்பட்டி உள்வட்டம் ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ள 10 கிராம ஊராட்சிகளுக்கு உள்பட்ட மறவமங்கலம், உசிலங்குளம், சிலுக்கப்பட்டி, மேலமருங்கூர், எரிவயல், இலந்தக்கரை, சேதாம்பல், மாரந்தை, வேளாரேந்தல், சிரமம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதில், தமிழ்நாடு மின்சார வாரியம், புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், கூடுதல் மின் பளு கட்டணங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வீட்டு வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள்குடிநீர், கழிவுநீர் இணைப்பு, கட்டுமான ஒப்புதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், வர்த்தக உரிமம் வேண்டி, வருவாய்த் துறை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணைய வழி பட்டா மாறுதல் நில அளவீடு உள்ளிட்ட 19 துறைகளின் சேவைகள் ஒரே இடத்தில் பயன் பெறும் வகையில் நடைபெற்ற முகாமில் 916 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் மறவமங்கலம் உள்வட்டம் சிறுகானப்பேரி குரூப் கழுகாடி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் மனைவி சித்ராதேவி என்பவருக்கும் மறவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த காசிலிங்கம் மனைவி ரேணுகாதேவி ஆகிய இருவரும் முழுப்புலம் பட்டா மாறுதலுக்கு மனு செய்திருந்த நிலையில் மேற்படி பட்டா மாறுதல் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக பட்டா மாறுதல் உத்தரவை காளையார்கோவில் வட்டாட்சியர் முபாரக்உசேன் வழங்கினார்.
ஏற்பாடுகளை, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாராணி, மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தார்.
இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிரமமம் ராஜகோபால், மாரந்தை திருவாசகம், கண்ணகிமலைசாமி, சந்தனகருப்பு, தாமேஸ்வரி, காளீஸ்வரி, திருமூர்த்தி, மலர்கொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்