சிவகங்கை: சிவகங்கை மாவட்ட தேமுதிக சார்பில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ஊனமுற்றோர் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கியும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 72 -ஆவது பிறந்த நாள் ஆண்டு தோறும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டப்பட்டு வருகிறது. .
அதன் ஒருபகுதியாக, சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
சிவகங்கையில் தேமுதிக மாவட்ட துனை செயலாளர் ஞானமுத்து தலைமையில் நகரச் செயலாளர் தர்மராஜ் முன்னிலையில் பனங்குடி சாலையில் உள்ள தாய் இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கேப்டன் அறக்கட்டளை சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது .
இதனை அடுத்த சிவகங்கை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து மேலூர் சாலையில் உள்ள ஆதரவற்ற தங்கும் விடுதியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் அருணாகண்ணன், மாவட்ட பொருளாளர் துரைபாஸ்கர், மாவட்ட துனை செயலாளர் ஞானமுத்து , நகரச் செயலாளர் தர்மராஜ், மாவட்ட வழக்கறிஞர் செயளாலர் சௌந்தரராஜன், மற்றும் தமிழ் முருகன், வேல்முருகன், வன்னிமுத்து , ரமேஷ், பாலகுரு, பீனூ அசல் ராஜா கண்ணன் சண்முகம் ராமகிருஷ்ணன்,சத்தி உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.