Close
டிசம்பர் 3, 2024 5:08 மணி

பதவி உயர்வு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்கள்

புதுக்கோட்டை: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஐந்து வருடம் பணி முடித்த குறு மைய பணியாளர்களுக்கும், பத்து வருடம் பணி முத்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற உதவியாளர் களுக்கும் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜயலெட்சுமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி, மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி, பொருளாளர் எஸ்.சவரியம்மாள் உள்ளிட்டோர் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top