Close
மே 12, 2024 8:05 மணி

பார்வையற்றோர் மறுமலர்ச்சி சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மறுமலர்ச்சி சங்கத்தினர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் மறுமலர்ச்சி சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச்செயலர் ஆர். ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மோசஸ், இணைச்செயலர் பாக்கியராஜ், பொருளர் முகமதுஆஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகளை விளக்கி வி. திருஞானம் பேசியதாவது: பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்க கூடிய உதவிதொகையினை ரூ.5000 ஆக உயர்த்தி மாதந் தோறும் வழங்க வோண்டும் என்பன உள்ளிட்ட பல்வோறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடத்த ஒருவார காலமாக சென்னையில் ஆப்பாட்டமும், உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வரும் பார்வையற்ற மாற்றுதிறனாளிகளை முதல்வர் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அந்த போராட்டத்துக்கு ஆதரவாக  எங்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம் என்றார்.

கோரிக்கைகள்:

எங்களது சங்கத்தை சேர்ந்த 5 நபர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

பார்வையற்ற 25- நபர்களுக்கு வீடு கட்டி கொள்ள இலவச வீட்டுமணை பட்டாவழங்க வேண்டும். எங்களது சங்கத்திற்கு அலுவலகம் கட்டிகொள்ள இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பெட்டி கடை மற்றும் தள்ளுவண்டி கடை நடத்த பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

லெனாவிலக்குப்பகுதியில் குடியிருந்து வரும் பார்வையற்றவர் களின் இல்லங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் குழாய் அமைத்து தர வேண்டும். எங்களால் பலமுறை வற்புறுத்தபடும் இக்கோரிக்கைகளை உடனனயாக நிறைவேற்றி தர வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top