Close
நவம்பர் 23, 2024 11:58 மணி

75ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மக்களுக்கான இயக்கமாகத் திகழ்கிறது: அமைச்சர் பேச்சு

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை: கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக மக்களுக்கான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்.

சிவகங்கையில் நகர, வடக்கு, கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: திமுக சமூக சீர்திருத்த இயக்கம். தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதுதும் வாழும் தமிழர்களுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த 75ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மக்களுக்கான இயக்கமாக பணியாற்றி வருகிறது.

எத்தனையோ, கட்சிகள், தலைவர்கள் இருக்கலாம். ஆனால் திமுகவில் இணைந்து அதன் தலைமையில் கீழ் பணியாற்றுவது பெருமை. ஒரு கட்சி எப்படி இருக்க வேண்டும், எப்படி கட்சியை நடத்த வேண்டும், தொண்டர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திமுக தான் முன்னுதாரணம்.

ஒரு ஆட்சி எப்பட இருக்க வேண்டும் என்பதற்கும் திமுக ஆட்சிதான் முன்னுதாரணம். திமுக ஆட்சியை இந்தியாவே வியந்து பார்க்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பார்த்து பல மாநிலங்கள் அங்கும் செயல்படுத்தி வருகின்றன.

கடந்த 10 தேர்தல்களில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என நம் முதல்வர் கூறினார். அதுபோல் வெற்றி பெற்றோம். 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிக்கும் மேல் வெல்ல வேண்டும் என அறிவித்திருக்கிறார்.

சிவகங்கை
கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன்

இன்னும் கூடுதலாக 234 தொகுதிகளையும் வெல்வதற்கு நாம் பணியாற்ற வேண்டும். தற்போது எதிர்க்கட்சிகள் வலுவிழந்து உள்ளன. ஆனால் இதை பார்த்து நாம் சாதாரணமாக இருந்து விடக்கூடாது. திமுக தலைவர் உழைக்கிறார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் உழைக்கின்றனர்.இதுபோல் கிளைக்கழக நிர்வாகிகளும் மக்களிடம் சென்று அவர்களது தேவைகள் அறிந்து பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகர் செயலாளர் துரைஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ்ராமநாதன், அயூப்கான், நிர்வாகிகள் ராஜாஅமுதன், தனசேகரன், சிங்கமுத்து, தொமுச முருகேசன், மார்க்கரெட் கமலா, ஒமேகாதிலகவதிகண்ணன், தமிழ்ப்பிரியாவேங்கை மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top