Close
நவம்பர் 24, 2024 11:53 மணி

மதுரை அருகே கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா

மதுரை அருகே கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் தாராப்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . தாராப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமலை நாயக்கரால் வெயிலான் காணி என்று செம்பு பட்டையும் வழங்கப்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் இதற்கான கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் வெயிலான் வகையறா பங்காளிகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த 13-ஆம் தேதி காலை 9 மணிக்கு மங்கள இசை உடன் விநாயகர் பூஜை லட்சுமிஹோமம் சுதர்சன ஹோமம் ஆரம்பிக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் ஆரம்பமாகியது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீர்த்த சங்கமம் யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து , 14 ஆம் தேதி காலை வேத பாராயணம் மூல மந்திர ஹோமம் மற்றும் முதல் கால பூர்ணாஹதி பூஜையுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனைத்து தெய்வங்களின் மூல மந்திர ஹோமம் வஸ்திரம் பிரதிஷ்டையுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை அர்ச்சகர் சந்தோஷ் குமார் சர்மா முன்னின்று நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை, வெயிலான் வகையறா பங்காளிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top