Close
நவம்பர் 21, 2024 6:05 மணி

சோளிங்கர் வித்யாபீடம் பள்ளி மாணவர்கள் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மாணவர்களிடம் போதைப்பொருள் பாதிப்பு குறித்து எடுத்துரைத்த பள்ளி தாளாளர் விஷ்வபாரதி

கடந்த மாதம் சிபிஎஸ்இ வாரியம் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் (NCB) இணைந்து புது தில்லி வசந்த் விஹாரில் உள்ள மாடர்ன் பள்ளியில் “No To Drug, Yes To Life” ஆம்” என்ற பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது.
இந்த பிரசாரத்தை அனைத்து சிபிஎஸ்சியுடன் இணைந்த பள்ளிகளிலும் போதை மருந்து விழிப்புணர்வு திட்டங்களை விரிவுபடுத்த போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிலையில் இன்று சோளிங்கர் வித்யாபீடம் பள்ளியும் சுகாதாரத் துறையும் இணைந்து “No to Drugs and Yes to life ” என்ற குறிக்கோளுடன் பேரணி தொடங்கினர். இதில் 9ஆம் வகுப்பு மாணவர்கள் போதைப்பொருள் தீமைகள் குறித்து நாடகவடிவில் கருத்துக்களைப் பகிர்ந்தனர்

9, 10, மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பேரணியை நடத்தினர். சோளிங்கர் கோயில் முன் இந்த பேரணியை தொடங்கி வைத்த பள்ளி தாளாளர் விஷ்வபாரதி, மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக கூறினார்.

சோளிங்கர் நகர் மன்றத் துணைத்தலைவர் அசோகன் பேசுகையில், தமிழத்தில் உள்ள இளம் வயதினர் போதைக்கு அடிமையாகி வருவதாகவும், போதைப்பொருட்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து பேசினார். மேலும் இது போன்ற விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்தை பாராட்டினார்.
சோளிங்கர் காவல் ஆய்வாளர் திருமதி. பாரதி பேசுகையில், சோளிங்கரில் உள்ள மற்ற பள்ளிகளும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்த முன்வர வேண்டும் என்று கூறினார்.

விழிப்புணர்வு பேரணியில் அப்பள்ளிஆசிரியர்கள், சோளிங்கர் வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர், சுகாதாரத் துறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கு பெற்றனர் பின்னர் அரக்கோணம் சாலையில் உள்ள பாணாவரம் கூட் ரோட்டில் பேரணியை நிறைவு செய்தனர். பள்ளி முதல்வர் நன்றி கூறினார்
இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தவசி மணி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top