Close
நவம்பர் 23, 2024 1:45 மணி

கனமழைக்கு மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!

மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் இருந்த புளியமரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால்,2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதையும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த பகுதியில் 56 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
.
இந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் சாய்ந்து மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் இருபுறம் இருந்தும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
.
அப்பகுதி வழியாக மதுரை,தேனி மற்றும் கேரளா வரை செல்லும் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. நேரம் ஆக ஆக வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகின.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல்
துறையினர் மரம் அறுக்கும் இயந்திரங்கள் உதவியுடன் சாலையில் விழுந்த மரத்தின் கிளைகளை வெட்டி
2 மணி நேரத்திற்கும் மேலாக போராடினர். இறுதியாக நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து சாலையில் விழுந்த மரத்தை சாலி ஓரம் தள்ளி விட்டனர்.

அதன்பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அந்த இடத்தைக்கடந்து செல்வதற்குள் அரை மணி நேரத்துக்கும் மேலானது.

மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், விளாங்குடி, அழகர்கோவில், மேலூர், திருமங்கலம், பூவந்தி, வரிச்சூர், கள்ளிக்குடி,பேரையூர், செக்கானூரணி, மேலக்கால்,தேனூர், துவரிமான், நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மதுரை நகரில், விடிய, விடிய பலத்த மழை பெய்ததால், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், சித்தி விநாயகர் கோயில் தெருவில், மழைநீர் குளம் போல சுற்றி வளைத்து நீர் வீட்டு வாசலில் நின்றது.
மருதுபாண்டியர் தெரு, ஆறாவது மெயின் ரோடு, சௌபாக்ய கோயில் தெருவில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து, சாலையில் கழிவு நீர் ஒடியது.

மதுரை யாகப்ப நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தேங்கியுள்ள நீரில் இரண்டு வாகனங்களில் சென்ற இருவர் தவறி விழுந்து சிறு காயங்கள் ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top