Close
நவம்பர் 22, 2024 12:25 மணி

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போது இதையெல்லாம் கவனத்தில் வைங்க..!

மகிழ்ச்சியாக பட்டாசு வெடிக்கும் சிறுவர்கள்

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. ஆமாம் எல்லோரும் உற்சாகமாக நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ளோம்.

பல நிறுவனங்களும் தீபாவளிப் பண்டிகைக்குத்தான் போனஸ் கொடுக்கிறார்கள். சிலர் பல பரிசுகளை வழங்குகிறார்கள். அதனால் தீபாவளி காஸ்ட்லீ பண்டிகை ஆகிவிட்டது. அதிலும் கொண்டாட்டம் என்றால் வெடிச்சத்தம் அதிகமாக கேட்டால் மட்டுமே தீபாவளி கொண்டாடிய திருப்தி ஏற்படும்.

ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பட்டாசுகளை வாங்கி குவித்து வெடிப்பதில் ஒரு அலாதி ஆனந்தம். அது என்னவோ கொண்டாட்டம் பட்டாசு வெடித்த மகிழ்வது பிரதான ஒன்றாகிவிட்டது.

எப்படி இருந்தாலும் சமூகத்தில் நாமும் ஒரு பிரஜை. அதனால் நமக்கென்று சில கடமைகள் உள்ளன. அந்த கடமைகளை பொறுப்பாக செய்யவேண்டும். சுற்றுச்சூழலுக்கு பட்டாசுகளால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராத காயங்கள் ஏற்படலாம். தீவிபத்து நேரிடலாம்.

ஆதலால் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பாப்போம் வாங்க :

  • பட்டாசு வெடிக்கும் போது செருப்பு அல்லது காலணிகள் அணிவது அவசியம்.
  • எப்போதும் திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்கவேண்டும். வீட்டுக்குள்ளோ அல்லது மூடிய இடத்திலோ பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
  • பட்டாசுகளை கொளுத்தும்போது பாதுகாப்புக்காக அருகில் தண்ணீர் வைத்துக்கொள்ளவும். தீ காயம் ஏற்பட்டால் பயன்படுத்த வேண்டிய மருந்துகளையும் வீட்டில் வைத்திருக்கவேண்டும்.
  • பட்டாசுகளை வெடிக்கும்போது தள்ளியே இருந்து கொளுத்துவது நல்லது.
  • பட்டாசுகளை எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகில் வைக்கவேண்டாம்.
  • ஒருவேளை தீ பற்றி எரிந்தால் உடனடியாக தண்ணீரை தெளிக்கவும்.
  • உங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வீராம் காட்டுவதாக நினைத்து பட்டாசுகளை கொளுத்தாதீர்கள். ஏனெனில் அவ்வாறு செய்தால் உங்கள் கைகளில் பட்டாசுகள் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதிப்பு ஏற்பட்ட பின்னர் அழுது பயனில்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
  • எரியும் விளக்கு அல்லது மெழுகுவர்த்திக்கு அருகில் பட்டாசுகளை வைக்க வேண்டாம்.
  • நீளமான பத்தியை பயன்படுத்தி பட்டாசை வெடிப்பது பாதுகாப்பானது.
  • உங்களைச் சுற்றி வேறு யாராவது பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.
  • மின் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அது ஆபத்தானது.
  • பட்டாசு வெடிக்காமல் அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அதை கையில் எடுக்கக் கூடாது. அல்லது அதை மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்கக் கூடாது. அதன்மீது தண்ணீர் ஊற்றிவிடவும்.
  • பாதி எரிந்த பட்டாசுகளை ஆங்காங்கே வீச வேண்டாம்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா?

பட்டாசு வெடிக்கலாம். ஆனால் நம்மோடு வாழும் பல ஜீவராசிகள் இந்த வெடிச் சத்தங்களால் அஞ்சி நடுங்கி இருப்பார்கள். அவைகள் நம்மை நம்பி வாழும் ஜீவன்கள். அவைகளுக்கு துன்பம் தராமல் அளவோடு பட்டாசு வெடிப்பதே சிறந்தது. முடிந்தவரை பசுமை பட்டாசு வாங்கி தீபாவளியை கொண்டாடுங்கள்.

அளவோடு வெடிக்கலாம். ஏனெனில் பட்டாசு உற்பத்தியை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காக நாம் சிறிது வாங்கி வெடிக்கலாம். பட்டாசு காற்று மாசு, ஒலி மாசு போன்றவைகளை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் உணரவேண்டும்.

அதனால் பிறருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் மருத்துவமனை அருகில் உள்ளவர்கள், அல்லது வீடுகளில் நோயாளிகள் இருக்கலாம். இப்படி எல்லாவற்றையும் நாம் அறிந்திருப்பதும் அவசியம். சமூக சிந்தனையோடு நாம் தீபாவளி கொண்டாடுவோம். பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுங்கள்.

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top