Close
நவம்பர் 22, 2024 6:12 மணி

திருச்சியில் கொண்டாடப்பட்ட பல்சமய நல்லுறவு தீபாவளி திருவிழா

;திருச்சியில் மும்மத குருமார்களால் தீபாவளி கொணடாடப்பட்டது.

திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவிரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக ‘பல்சமய நல்லுறவு தீபாவளி’ திருவிழா புதன்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

திருச்சி சுப்பிரமணியபுரம் அருகில் உள்ள சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நடைபெற்ற இவ்விழாவில் சுப்ரமணியபுரம் அருளானந்தர் ஆலய அருள் தந்தை பிலோமின் ராஜ், சுந்தர்ராஜ் நகர் சுந்தர விநாயகர் கோயில் குருக்கள் ராஜ்குமார் மற்றும் கார்த்திக், சலாஹியா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹஜ்ரத் அப்துல் ரஹீம் மன்பயி, கலந்துகொண்டு சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

அருட்தந்தை பிலோமின் ராஜ் பேசும்போது இருளை நீக்கி, ஒளி தரும் நாளாக தீபாவளி பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்டார். அன்பினாலும் இரக்கத்தினாலும் உலக மக்கள் அனைவரும் வாழ்வதற்காக பிரார்த்தித்து  கொள்கிறேன் என்று கூறினார்.

ஓய்வு பெற்ற பெல் அதிகாரி ராஜாமணி “மாசற்ற தீபாவளி” கொண்டாடுவதற்கான உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மூத்த கல்வியாளர் அலைஸ் விக்டர் .ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள் விக்டர் பொன்னுதுரை, எஸ் ஆர் சத்தியவாகீஸ்வரன், நபி கான் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top