Close
நவம்பர் 24, 2024 11:20 காலை

குறை தீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை: கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடப்பது வழக்கம். அதன்படி 5ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாலுகா அளவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் உதவி இயக்குனர் தணிக்கை கல்யாணி தலைமையில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர்கள் முத்துராஜன், கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியர் துரை ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சொற்ப அளவிலான அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். வட்ட வளர்ச்சி அலுவலர்கள், பத்திரபதிவுத்துறை உட்பட 20க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அப்போது விவசாயிகளை அவமதிக்கும் வகையில் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து வரும் காலங்களில் எல்லா அதிகாரிகளும் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்ப டு ம் என அதிகாரிகள் உறு தி அளித்த பின்னரே மீண்டும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.
செங்கம்
செங்கம் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் துக்காப்பேட்டை வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் முருகன் வரவேற்றாா்.
இதில், செங்கம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்கியவுடன் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரா்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.
பின்னா், கோரிக்கைகளை முன்வைத்துப் பேசவும், மனுக்கள் கொடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை குறிப்பிட்ட துறை அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டதைப் பாா்த்த விவசாயிகள் ஏன் தொடா்ந்து முதல்நிலை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணிக்கிறாா்கள் என கேள்வி கேட்டனா். அதிகாரிகள் வந்த பிறகு கூட்டம் நடத்தவேண்டுமென விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னா் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினா்.
பிறகு கூட்ட அரங்கில் குறைந்த அளவில் பொதுமக்கள் மட்டும் அமா்ந்திருந்தனா். அவா்களை வைத்து பெயா் அளவில் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, செங்கம் நகா் பகுதி மக்கள் சாா்பில், துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் போளூா் மேம்பாலம் வரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது.

அந்தச் சாலை போடும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாகக் கண்காணித்து பாா்வையிடாமல் போட்டதால் தற்போது புதிதாக போடப்பட்ட தாா்ச்சாலை அங்காங்கே பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது.

இதை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோல, சாலை தடுப்புச் சுவா்களில் துக்காப்பேட்டை முதல் பழைய பேருந்து நிலையம் வரை போடப்பட்ட மின் விளக்குகளைக் காணவில்லை என புகாா் மனு அளித்தனர்.

விவசாயிகள் யாரும் கலந்து கொள்ளாமல் விவசாய குறை தீர்வு கூட்டம் நடத்திய அதிகாரிகளை விவசாயிகள் கண்டித்து தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top