Close
நவம்பர் 22, 2024 3:17 காலை

கூட்டுறவு மரம் சுவர் ஓவிய பதிவு: பொதுமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்த உணவு பாதுகாப்பு துறை கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன்

கூட்டுறவு என்றாலே அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளில் முன்பு கூட்டுறவு என்பதின் விளக்கம் மற்றும் அதன் சுவர்களில் பல்வேறு தமிழக வரலாற்றுச் சான்றுகள் ஓவியங்களாக கடந்த ஓராண்டுகளாக வரையப்பட்டு வருகிறது.
இது மட்டும் இல்லாது நியாய விலை கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூறுவதால் தமிழக வரலாற்று சின்னங்களை அறிந்து கொள்ளவும் இது உதவுகிறது என்பதால் தமிழகம் முழுவதும் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் வாளகத்தில் அமைக்கப்பட்ட புதிய காய்கறி அங்காடி மற்றும் மருந்தகம் சுவர்களின் காய்கறிகள் மற்றும் மருந்துகளின் சுவர் ஓவியங்கள் பிரம்மாண்டமாக வரையப்பட்டு அதில் அந்த விளம்பரதிற்கான திருக்குறளும் எழுதப்பட்டு வருகிறது.
இன்று இதனை திறக்க தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட புதிய கடைகள் மற்றும் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


மேலும் இந்த சுவர் ஓவியங்கள் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர் புகைப்படம் எடுக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அவரது செல்போனை வாங்கி செய்தியாளர்களுடன் இணைந்து வரிசையில் நின்று மொபைலில் பதிவு செய்து தந்தார்.
இதைத் தொடர்ந்து சதாவரம் நியாய விலை கடையில் கூட்டுறவு மரம் ஓவியம் வரையப்பட்டிருந்த நிலையில் அதன் கிளைகளாக மனித கை அச்சுகளை பதிவிடும் நிகழ்வும் நடைபெற்றது.
கூடுதல் செயலாளர் ஆட்சியர் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் குழந்தைகள் என பலர் பல வண்ணங்கள் மூலம் கை பதிவினை மேற்கொண்டனர்.
இறுதியாக அதன் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து கூட்டறவினை வளர்ப்போம் எனவும் கூறினார்.
புதிய எண்ணத்தில் வண்ணத்தில் காட்சியளித்த கூட்டுறவு மரம் பதிவினை ஏராளமான நின்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top