Close
நவம்பர் 21, 2024 10:00 மணி

விவசாயிகள் நலனுக்காக வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் பணியினை துவக்கி வைத்த கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஏரிகள் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுர மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளது. இது மட்டுமில்லாமல் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு சிறு ஏரிகளும் குளங்களும் உள்ளது.
இவைகளின் நீர் சேமிப்போம் மூலம் பல்லாயிரக்கணக்கான இயக்க விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் நெல், வேர்க்கடலை, தோட்ட பயிர்கள் என பல வகைகள் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் விவசாய வளர்ச்சிக்கு பெரும் எதிரியாக விளங்குவது பூச்சிகள் . இதற்காக பல வகைகளில் சாதனை கட்டுப்படுத்த இயற்கை மற்றும் செயற்கை மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
ஆனாலும் அந்த இயற்கை மருந்துகளில் போதிய எதிர்ப்பு தன்மை இல்லாத காரணத்தினால் அதன் வீரியம் குறைந்தே காணப்படுகிறது.
இந்நிலையில் பூச்சிக்கொல்லியை தடுக்க சிறந்த மருந்தாக முன்னோர்கள் வேப்பம் புண்ணாக்கு என கூறப்படும் பொருளை பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வருவதால் மகசூல் , இயற்கை வளம் உள்ளிட்டவைகளும் காக்கப்பட்டது.


இந்நிலையில் விவசாயிகளின் நலனுக்காக தமிழக கூட்டுறவுத்துறை பல்வேறு விவசாய உபகரணங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தற்போது குறைந்த விலையில் வாடகைக்கு அளித்து வரும் நிலையில், மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆர்ப்பாக்கம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம் சார்பில் வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் பணியை துவங்க திட்டமிட்டனர்.
இதற்காக கோயம்புத்தூரில் இருந்து அரவையை இயந்திரம் ரூபாய் 2.10 லட்சம் மதிப்பீட்டின் வாங்கப்பட்டது. இதற்கான மூலப் பொருளான வேப்பங்கொட்டையை கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் வேப்பங்கொட்டை விற்பனை சேவா சங்கம் மூலம், முதல் தர வேப்பங்கொட்டை கிலோ ஒன்றுக்கு 36 ரூபாய் வீதம் வாங்கப்படுகிறது.
இந்த வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் பணியை இன்று தமிழக கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு சங்க கட்டிடத்தில் துவக்கி வைத்தார்.
இதன் மூலம் பல்வேறு எடை அளவு கொண்ட பைகளில் வேப்பம் புண்ணாக்கு தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் வேப்பம் புண்ணாக்கு தரமான வேப்பங்கொட்டை மூலம் வேப்ப எண்ணெய் மற்றும் புண்ணாக்கு என பிரிக்கப்படாமல் அரைத்து விற்பனை செய்யப்படுவதால் இதன் தன்மை பூச்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் .
வரும் காலங்களில் விவசாயிகளின் வரவேற்பை பெற்று கூடுதலாக உற்பத்திகள் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும் இது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை தொடரும் எனவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top