Close
ஏப்ரல் 4, 2025 5:06 காலை

வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம்..!

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளை மதிப்பீடு செய்து சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்துவருகிறது.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில்,மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் நடந்து வருகிறது.

இந்த முகாமினை, தலைமை மருத்துவர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், கண், காது,மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு மற்றும் மனநலம், குழந்தைகள் நல மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளை, மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

இந்த முகாம் 9ந்தேதி சனிக்கிழமை மற்றும் 11ம் தேதி திங்கள்கிழமையும் நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளி பயனாளர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று தலைமை மருத்துவர் சாந்தி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top