Close
நவம்பர் 14, 2024 4:51 காலை

திருவண்ணாமலை ஐப்பசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம் தெரியுமா?

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி எக்கச்சக்கமான விசேஷங்களை உள்ளடக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.

வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.19 மணிக்கு துவங்கி மறுநாள் 16 ஆம் தேதி சனிக்கிழமை காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்புகள்

ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான்.

திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு! நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து உணவை சாப்பிட்டால் அன்னதோஷம், அன்ன துவேஷம் நீங்கும்.

இந்த அற்புத நாளில் விரதம் இருந்து சிவ பெருமான் வழிபாடு செய்வதால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் கூட நீங்கும் என்பது சிறப்பு. அதோடு செல்வ வளம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

இந்த பௌர்ணமி நாளில் வழிபடுவதால் மனிதர்களின் மனங்களில் மட்டும் இன்றி வாழ்க்கையிலும் நல்ல மாற்றம் ஏற்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top