Close
டிசம்பர் 3, 2024 5:13 மணி

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் கலை திருவிழா நடத்தி வருகிறது.

வட்டார , மண்டல அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் மாவட்ட அளவில் மாணவர்கள் பல்வேறு கலை பிரிவுகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வரவேற்புரையுடன் தொடங்கியது.

இந்நிகழ்வில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி, கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியினை துவக்கி வைத்தார். இப்போட்டி இன்று துவங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் உரையாற்றிய ஆட்சியர் கலைச்செல்வி, கடந்தாண்டு நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டம் கருவி இசை, கோலாட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து , நடனம் என ஐந்து பிரிவுகளில் முதலிடத்தையும், கருவியிசை, காற்று கருவி , பிற மாநில நடனம் , கையெழுத்து என ஐந்து பிரிவுகள் இரண்டாம் இடத்தையும் பெற்று சிறப்பாக விளங்கியது என தெரிவித்தார்.

விழாவில் பேசிய அமைச்சர் காந்தி, இன்றைய தேவைக்கான சுற்றுச்சூழல் குறித்து மையக் கருத்தாக வைத்து இப் போட்டி நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஒவ்வொருவரும் இந்த கருத்தினை மையமாகக் கொண்டு செயல்பட்டு சிறப்பாக போட்டியில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.பி செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மேயர் மகாலட்சுமி, நித்யா சுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top